/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொழில் துறை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை ஈடிசியா கூட்டத்தில் ஈரோடு எம்.பி., உறுதி
/
தொழில் துறை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை ஈடிசியா கூட்டத்தில் ஈரோடு எம்.பி., உறுதி
தொழில் துறை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை ஈடிசியா கூட்டத்தில் ஈரோடு எம்.பி., உறுதி
தொழில் துறை முன்னேற்றத்துக்கு முன்னுரிமை ஈடிசியா கூட்டத்தில் ஈரோடு எம்.பி., உறுதி
ADDED : ஜூன் 19, 2024 02:33 AM
ஈரோடு, ஈரோடு மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (ஈடிசியா) செயற்குழு கூட்டம் மற்றும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரோடு எம்.பி.,க்கு பாராட்டு விழா நடந்தது. ஈடிசியா தலைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். செயலாளர் சுரேஷ் வரவேற்றார். முன்னாள் தலைவர் அக்னி சின்னசாமி முன்னிலை வகித்தார்.
ஈரோடு, தி.மு.க.,- எம்.பி., பிரகாஷ் பேசியதாவது:
ஈரோடு மாவட்டத்தின் வளர்ச்சியில் சிறு தொழில்கள் பங்கு மிகவும் முக்கியமானது. தொழில் துறை முன்னேறினால் மட்டுமே இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முதலீட்டாளர், தொழிலாளர்களின் வாழ்வாதாரமும், பொருளாதாரம் வளரும்.
எனவே தொழில் துறையின் முன்னேற்றத்துக்கு முக்கியத்துவம் அளித்து செயல்படுவேன். மத்திய அரசு மூலம் தொழில் துறையினருக்கு கிடைக்க வேண்டிய மானியங்கள், திட்டங்களை முழுமையாக கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வேன்.
தமிழகத்தில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், தொழில் துறையினருக்கு பல்வேறு சலுகைகள், திட்டங்கள், வளர்ச்சிக்கான பணிகளை செயல்படுத்தி வருகிறார். புதிய தொழில்கள் துவங்குவதற்கான நடவடிக்கைகளை எளிமைப்படுத்தி உள்ளார். முதலீட்டு மானியங்களும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
ரயில்வே மேம்பாலம் உட்பட மத்திய அரசு சார்பில் செயல்படுத்த வேண்டிய பல்வேறு திட்டங்கள், கோரிக்கைகள் தொடர்பாக மனு வழங்கி உள்ளீர்கள்.
தொழில் துறையினரின் கோரிக்கைகள் தொடர்பாக, மத்திய அமைச்சகத்துக்கு கொண்டு சென்று நிறைவேற்ற முன்னுரிமை கொடுப்பேன். தொழில் துறையின் முன்னேற்றம்தான் ஈரோட்டின் முன்னேற்றம் என்பதால், அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டியது நமது கடமை.
இவ்வாறு அவர் பேசினார்.