ADDED : ஆக 05, 2024 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு வனக்கோட்டத்தில் உள்ள அந்தியூர், பர்கூர், தட்டக்கரை, சென்னம்பட்டி மற்றும் ஈரோடு வனச்சரக பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள், மக்கள் வனத்துறை சார்ந்த கோரிக்கைகளை தெரிவிப்பதற்கு, அவற்றை நிவர்த்தி செய்வதற்கும், மாவட்ட வன அலுவலர் தலைமையில், குறைதீர் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதன்படி ஈரோடு மாவட்ட வன அலுவலகத்தில் நாளை காலை, 11:00 மணியளவில் குறைதீர் கூட்டம் நடக்கிறது.