/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள், மக்கள் கவலை
/
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள், மக்கள் கவலை
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள், மக்கள் கவலை
அந்தியூரில் அடிக்கடி மின்வெட்டு வியாபாரிகள், மக்கள் கவலை
ADDED : ஏப் 14, 2024 07:59 AM
அந்தியூர் : அந்தியூர், தவிட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில், 500 விசைதறிகள், 300 கைத்தறிகள் இயங்குகின்றன. இத்தொழிலை நம்பி, ௧௦ ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். கடந்த சில நாட்களாக இப்பகுதிகளில், இரவு, பகல் பாராமல், அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. இதனால் தறிகள் இயங்காமல், நுால் மற்றும் சேலை, துண்டுகள் நெய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகள், முதியவர்கள் மின்சாரமின்றி அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து அந்தியூர் மின்வாரிய அதிகாரி அங்கப்பன் கூறியதாவது: லோக்சபா தேர்தல் நேரத்தில், மின்சாரம் தடைபடக்கூடாது. இதற்காக மின் கம்பிகளில், மரம் உரசுவது, டிரான்ஸ்பார்மரில் உள்ள பழுது உள்ளிட்ட இடையூறுகளை சரி செய்யும் பணி நடக்கிறது. இதனால் மின்தடை ஏற்பட்டது. மேலும் அந்த பணிகளை சரிசெய்து விட்டோம். நாளை (இன்று) முதல் மின்தடை ஏற்படாது. இவ்வாறு அவர் கூறினார்.