/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மாணவி பலாத்கார வழக்கு 8 பேர் மீது குண்டர் சட்டம்
/
மாணவி பலாத்கார வழக்கு 8 பேர் மீது குண்டர் சட்டம்
ADDED : மே 05, 2024 03:25 AM
காங்கேயம்: மாணவி கூட்டு பலாத்கார வழக்கில் கைதான 8 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.
வெள்ளகோவில் வீரக்குமாரசுவாமி கோவிலுக்கு, மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம், 8ம் தேதி முதல் 10ம் தேதிவரை தேர்த்திருவிழா நடந்தது. ௧௦ம் தேதி இரவு நடந்த இன்னிசை கச்சேரியை பார்க்க தனது தாயாருடன் வந்த, 17 வயது பாலிடெக்னிக் கல்லுாரி மாணவி மாயமானார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசில், அவர் புகாரளித்தார்.
மறுநாள் அதிகாலை வீட்டுக்கு சென்ற மாணவி, பலர் சேர்ந்து தன்னை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறினார். இதுகுறித்த புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து வெள்ளகோவில், செம்மாண்டம்பாளையம், மணிகண்டன், 29; காமராஜர்புரம் பிரபாகர் 32; மூலனுார், தொட்டம்பாளையம் தினேஷ், 27, பாலசுப்பிரமணி, 30; வெள்ளகோவில், ஏ.பி.புதுார் நவீன்குமார், 26; சிவநாதபுரம் மோகன்குமார், 28; வெள்ளகோவில் மயில்ரங்கம் நந்தகுமார், 30; வெள்ளகோவில் பாரதிநகர் தமிழ்செல்வன், 28, என எட்டு பேரை கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் எட்டு பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதற்கான நகல் எட்டு பேரிடமும், நேற்று வழங்கப்பட்டதாக, போலீசார் தெரிவித்தனர்.