/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வெள்ள நீர் சூழ்ந்ததால் எரிவாயு தகன மேடை மூடல்
/
வெள்ள நீர் சூழ்ந்ததால் எரிவாயு தகன மேடை மூடல்
ADDED : ஆக 02, 2024 01:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி, மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும், உபரிநீராக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டுள்ளதால், பவானியில் கந்தன் பட்டறை, பசுவேஸ்வரர் தெரு, மீனவர் தெரு, பாலக்கரை பகுதிகளில், 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.
காவிரி கரையோரத்தில் உள்ள பவானி நகராட்சி மயானத்தில் வெள்ளநீர் சூழ்ந்ததால் எரிவாயு தகனமேடை தற்காலிகமாக மூடப்பட்டது. அதே பகுதியில் உள்ள விநாயகர் கோவிலையும் வெள்ளநீர் சூழ்ந்து, பெருக்கெடுத்து ஓடுகிறது. பவானி பழைய பாலத்தில் இரண்டாவது நாளாக போக்குவரத்து தடை செய்யப்பட்டது.