/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி அரசு பள்ளிகள் அசத்தல்
/
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி அரசு பள்ளிகள் அசத்தல்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி அரசு பள்ளிகள் அசத்தல்
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் கோபி அரசு பள்ளிகள் அசத்தல்
ADDED : மே 11, 2024 11:41 AM
கோபி: கோபியில் அரசு பள்ளி மாணவ, மாணவியர்கள், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில், அதிக மார்க் எடுத்து அசத்தியுள்ளனர்.
கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் (நிதியுதவி), 215 பேர் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதியதில், 212 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவன் நிர்மல், 484 மார்க் பெற்று முதலிடம், சுபின், 480 மார்க் எடுத்து இரண்டாமிடம், பாண்டியராஜன், 479 மார்க் எடுத்து மூன்றாமிடம் பெற்றனர். மூவரையும் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் பாராட்டினார்.
பொலவக்காளிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 128 பேரில், 127 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி பிரியதர்ஷினி, 482 எடுத்து முதலிடம் பெற்றார். கரட்டடி
பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தேர்வெழுதிய, 49 பேரில், 48 பேர் தேர்ச்சி பெற்றனர். மாணவி கோமதி, 480 எடுத்து பள்ளியில் முதலிடம் பிடித்தார்.