/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நஷ்டத்தில் இயங்கும் ௮௧ கைத்தறி கூட்டுறவு சங்கம்
/
நஷ்டத்தில் இயங்கும் ௮௧ கைத்தறி கூட்டுறவு சங்கம்
ADDED : பிப் 18, 2024 10:22 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தற்போது, 192 கைத்தறி கூட்டுறவு சங்கங்கள் செயல்படுகின்றன. இதில் கடந்த அ.தி.மு.க.,ஆட்சியில் ஆறு சங்கங்கள் மட்டும் நஷ்டத்தில் இயங்கின.
தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு, படிப்படியாக உற்பத்தி குறைவு ஏற்பட்டு, 81 சங்கங்கள் தற்போது நஷ்டத்தை நோக்கி செல்கிறது. முக்கியமாக நுால் கொள்முதலில் கைத்தறி துறை அதிகாரிகளின் சரியான வழிகாட்டுதல் இல்லாததால், கூடுதல் விலைக்கு தரமற்ற நுாலை அதிக விலைக்கு கொள்முதல் செய்து உற்பத்தி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட தொடக்க கைத்தறி கூட்டுறவு சங்க மேலாளர் சங்கத்தினர், சமீபத்தில் கோவை வந்திருந்த தி.மு.க., - எம்.பி., கனிமொழியிடம் மனு வழங்கினர்.
மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: தொடக்க கைத்தறி கூட்டுறவு சங்கங்களுக்கு விற்பனை தள்ளுபடி மானியம், 20 சதவீதம், செப்., 15 முதல் ஜன., 31 வரை, 30 சதவீதம் தள்ளுபடி மானியம் வழங்கப்படுகிறது.
இதை மாற்றி ஆண்டு முழுவதும், 30 சதவீத தள்ளுபடி மானியம் உச்ச வரம்பின்றி வழங்க வேண்டும். உற்பத்திக்கு தேவையான நுால் கொள்முதலை, அந்தந்த நெசவாளர் சங்க நிர்வாகமே மேற்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.
ஈரோடு மாவட்டத்தில் பவானி, அந்தியூர், கோபி தாலுகா பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் அதிகமான கைத்தறிகளில் கால் மிதியடி உற்பத்தி செய்யப்படுகிறது. தற்போது இதற்கு தேவையான நுாலை, கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.
இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதற்கு கைத்தறி துறையில் பணியாற்றும் ஒரு சில அதிகாரிகளே காரணம். தி.மு.க., அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கில், அரசுக்கு தவறான புள்ளி விபரங்களை கொடுத்து வருகின்றனர். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.