/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தொடர் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்
/
தொடர் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்
தொடர் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்
தொடர் மழையால் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு அரசு மருத்துவமனையில் குவியும் மக்கள்
ADDED : ஆக 18, 2024 02:53 AM
ஈரோடு: தொடர் மழை பெய்து வருவதாலும், காவிரியில் புதிய தண்ணீர் வரத்தாகி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீராக வினியோகிக்கப்படுவதால், அதிக நபர்கள் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.
வழக்கமாக ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு தினமும், காலை முதல் இரவு வரை, 2,000க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் காய்ச்சல், சளி, இருமல், உடல் உபாதைகள், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், பல்வேறு தொடர் சிகிச்சைக்காக வருவவ்ந்து செல்வார்கள். மழை, பனி காலம் இல்லாத நாட்களில், 50 முதல், 75 பேருக்குள் காய்ச்சல், சளி, இருமல் பாதிப்புடன் வருவார்கள். சீசன் காலங்களில், 300 பேர் வரை வந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 10 முதல், 15 நாட்களாக பகலில் கடும் வெயிலும், மாலை மற்றும் இரவில் மழை, காற்றும் வீசுவதால், பலரும் காய்ச்சல், அதன் தொடர்ச்சியாக சளி, இருமல் உள்ளிட்ட உபாதைகளுக்கு ஆளாகி வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக, ஈரோடு அரசு மருத்துவமனைக்கு, 150 முதல், 200 பேர் வரை இப்பிரச்னையால் சிகிச்சை பெற வருகின்றனர். இதுபற்றி அரசு மருத்துவ அலுவலர்கள் கூறியதாவது: தற்போதைய நிலையில், மாவட்டத்தில் டெங்கு உள்ளிட்ட பிற காய்ச்சல் பாதிப்பு மிக, மிக குறைவு. தொடர் மழையில் நனைவதாலும், மழைக்கு முன்னும், பின்னும் வெளியே சென்று வருவதாலும் ஈரக்காற்றாலும் சளி, இருமல் மற்றும் காய்ச்சல் ஏற்படுகிறது. அதிகமாக பள்ளி குழந்தைகள் காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகின்றனர். 3 முதல், 5 நேரத்துக்கு மருந்து எடுத்தாலே குணமாகிறது. அச்சப்படும்படி ஏதுமில்லை. மாவட்ட அளவில் இப்பிரச்னை அதிகம் உள்ளது. இவ்வாறு கூறினர்.