/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீரிப்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்
/
கீரிப்பள்ளம் ஓடையில் தடுப்புச்சுவர் பணி தீவிரம்
ADDED : ஆக 26, 2024 08:16 AM
கோபி: கோபி நகராட்சி பகுதிகளின் கழிவுநீருக்கு, கீரிப்பள்ளம் ஓடை வடிகாலாக உள்ளது. இந்த ஓடை பாரியூர் அருகே பதி என்ற இடத்தில், தடப்பள்ளி வாய்க்காலில் கலக்கிறது.
இந்நிலையில் நகராட்சி சார்பில், 14 கோடி ரூபாயில், கசடு மற்றும் கழிவு சுத்தி-கரிப்பு நிலையம் கட்டும் பணி, கபிலர் வீதி மற்றும் வீராசாமி வீதிக்கு அருகே தொடங்கியது. கடந்த ஜூலை மாதம் பெய்த மழையால், சுத்திகரிப்பு நிலையம் கட்டமைப்புக்காக கொட்டியி-ருந்த மண் மேடையால், ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் வீதியில், 20 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இந்நிலையில் ஒரு வாரமாக, ஊஞ்சக்காட்டு மாரியம்மன் கோவில் அருகே தடுப்புச்-சுவர் கட்டும் பணி தீவிரமாக நடப்பதாக, நகராட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

