/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தம்பிக்கலை அய்யன் கோவிலில் இன்று கஞ்சி தெளிக்கும் நிகழ்வு
/
தம்பிக்கலை அய்யன் கோவிலில் இன்று கஞ்சி தெளிக்கும் நிகழ்வு
தம்பிக்கலை அய்யன் கோவிலில் இன்று கஞ்சி தெளிக்கும் நிகழ்வு
தம்பிக்கலை அய்யன் கோவிலில் இன்று கஞ்சி தெளிக்கும் நிகழ்வு
ADDED : ஆக 21, 2024 01:04 AM
அந்தியூர்,அந்தியூர் அருகே பொதியாமூப்பபனுாரில், பிரசித்தி பெற்ற தம்பிக்கலை அய்யன் கோவிலில் நடப்பாண்டு விழா கடந்த, ௬ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. கோவிலில் நேற்று அலங்கார பூஜை நடந்தது. முக்கிய நிகழ்வான இன்று காலை, கஞ்சி விளையாட்டு நிகழ்வு நடக்கிறது.
சுடுகஞ்சியை நன்கு காய வைத்து, கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் மீது கோவில் மிராசுதாரர்கள், தென்னம்பாலையில் நனைத்து தெளிப்பார்கள். இதனால் நோய் குணமாகும், குழந்தை பாக்கியம், திருமணத்தடை விலகும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதில் கலந்து கொள்வதற்காக ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு ஊர்களில் இருந்து மக்கள் வருவர். இந்நிகழ்வை தொடர்ந்து பரணேறுதல் நிகழ்ச்சி நடக்கும். 25ல் வன மறு பூஜை, செப்., ௪ல் பால் பூஜை, 10ல் லோக பூஜையுடன் விழா நிறைவடைகிறது.