/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
5 மாதமாக தரிசு நிலமாக கிடக்கும் காவேரி சாலை
/
5 மாதமாக தரிசு நிலமாக கிடக்கும் காவேரி சாலை
ADDED : ஜூன் 23, 2024 02:34 AM
ஈரோடு:ஈரோடு மாநகராட்சி, 38வது வார்டுக்கு உட்பட்ட காவேரி சாலையில், தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. குறிப்பாக கிழக்கு சின்ன மாரியம்மன் கோவில் தெரு, காவேரி தெரு, காமாட்சி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பகுதி மக்களின்
பிரதான வழித்தடமாக இந்த சாலை உள்ளது.
குண்டும் குழியுமாக இருந்த சாலையை சீரமைக்க, பொக்லைன் இயந்திரத்தால் தோண்டி போட்டனர். கழிவுகளை அதே சாலையில் குவித்தனர். ஆனால், ஐந்து மாதங்களுக்கும் மேலாக, தார்ச்சாலை அமைக்கும் பணியை தொடங்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சில கிலோ மீட்டர் சுற்றி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், காவேரி சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதால், வாகனங்களும் செல்ல சிரமமாக உள்ளது. தார்ச்சாலை அமைக்க இன்னும் எத்தனை காலம் ஆகும் என்று, மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.