/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
/
நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : ஆக 30, 2024 04:14 AM
பெருந்துறை: பெருந்துறை சாகர் அகாடமியில் படித்து, நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு, சாகர் இண்டர்நேஷனல் பள்ளியில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி அறக்கட்டளை தலைவர் ஆறு-முகம் தலைமை வகித்தார். தாளாளர் சௌந்திரராசன், மாணவர்க-ளுக்கு கல்வி உதவி தொகை வழங்கி பேசினார்.
இப்பள்ளி மூலம், சாகர் அகாடமி நீட் ரிப்பீட்டர்ஸ் தொடங்கப்-பட்டு, ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த ஆண்டு நீட் பிரிவில், 127 மாணவர்கள் பயின்றனர். இதில் நவீன் மற்றும் ஜோதீஸ், 720க்கு 685 மதிப்பெண் பெற்றனர். மேலும், 600 மதிப்பெண்களுக்கு மேல் 33 மாணவர்கள், 550 மதிப்பெண்-களுக்கு மேல் 50 மாணவர்களும் பெற்றனர். அரசு மருத்துவ கல்லுாரியில் சேர தகுதி பெற்ற மாணவர்களை பள்ளிக்கு வரவழைத்து, பாராட்டி கல்வி உதவித்தொகை வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த வருடத்தில், 680 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவர்களுக்கு, மருத்துவ படிப்புக்கான கல்வி கட்டணத்தை, பள்ளி நிர்வாகமே ஏற்றுக் கொள்ளும் என்பதை தாளாளர் செளந்திரராஜன் தெரிவித்தார். மாணவர்களுக்கு கல்வி உதவிதொகையாக, 65 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாக நிர்வா-கிகள் தெரிவித்தனர்.
விழாவில் பள்ளி அறக்கட்டளை துணைத்தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் பழனிச்சாமி, பள்ளி முதல்வர் ஷீஜா, கல்வி இயக்-குனர் சுரேந்திர ரெட்டி கலந்து கொண்டனர்.