/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரசாரத்தால் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு
/
பிரசாரத்தால் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு
ADDED : ஏப் 17, 2024 01:45 AM
புன்செய்புளியம்பட்டி:பவானிசாகர்
மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில், வாழை, மஞ்சள் மற்றும் மல்லி,
முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இதனால் விவசாய கூலி வேலைக்கு மக்கள் அதிகம் செல்கின்றனர்.
தற்போது
லோக்சபா தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. கட்சியினர் தங்கள்
பலத்தைக் காட்ட கூட்டத்தை திரட்டுகின்றனர். இதனால் பவானிசாகர்
சுற்றுவட்டார பகுதிகளில், கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு
ஏற்பட்டுள்ளது. விவசாய கூலி வேலைக்கு செல்வோருக்கு தினசரி கூலியாக,
200 முதல், 350 ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. காலையில்
சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால், தேர்தல் பிரசாரத்துக்கு
காலையில், 2 மணி நேரம், மாலையில், 2 மணி நேரம் சென்றால் போதுமானது.
தினசரி
கூலியாக, 300 ரூபாய் வரை, மட்டன், சிக்கன் பிரியாணி கிடைக்கிறது.
குடிமகன்களுக்கு சரக்கும் கிடைக்கிறது. இதனால் விவசாய கூலி
தொழிலாளர், தேர்தல் பிரசாரத்துக்கு செல்வதில் ஆர்வம்
காட்டுகின்றனர். இதனால் பவானிசாகர் கிராம பகுதிகளில் கூலி
தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இன்றுடன் தேர்தல்
பிரசாரம் நிறைவு பெற உள்ளதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு
முடிவுக்கு வரும்.

