/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கொடுமுடியில் நாளை லட்சார்ச்சனை நிறைவு
/
கொடுமுடியில் நாளை லட்சார்ச்சனை நிறைவு
ADDED : ஆக 06, 2024 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடுமுடி, கொடுமுடி மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவிலில் ஆடிப்பூர லட்சார்ச்சனை விழா நாளை நடக்கிறது.
முன்னதாக இந்நிகழ்வு கடந்த, 3ம் தேதி தொடங்கியது. இன்று காலை கோபூஜை, லட்சார்ச்சனை தொடர்ச்சி, இரண்டாம் கால, மூன்றாம் கால யாக வேள்வி நடக்கிறது. நாளை காலை, 10:30 மணிக்கு லட்சார்ச்சனை பூர்த்தி, மூலவர் மஹாலக்ஷ்மி தாயாருக்கு மஹா அபிஷேகம் நடக்கிறது. மதியம் பெருமாள் தாயார் உபய நாச்சிமார்களுடன் திருக்கல்யாண வைபவம், இரவில் மூலவர் தாயாருக்கு லட்சுமி திரிசதி, அஷ்டோத்திர சஹித புஷ்பாஞ்சலி, மகாதீபாராதனை நடக்கிறது.