ADDED : ஆக 02, 2024 02:02 AM
* கோபி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. மொத்தம், 8,525 கிலோ பருப்பு வரத்தானது. ஒரு கிலோ, 95 ரூபாய்க்கு விற்பனையானது. மொத்தம், 8.04 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
* கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 60 ரூபாய், நேந்திரன், 43 ரூபாய்க்கும் விற்றது. பூவன் தார், 740, தேன்வாழை, 700, செவ்வாழை, 1,000, ரொபஸ்டா, 410, மொந்தன், 390, ரஸ்த்தாளி மற்றும் பச்சைநாடான், தலா, 630 ரூபாய்க்கும் விற்பனையானது. வரத்தான, 8,475 வாழைத்தார்களும், 15.65 லட்சம் ரூபாய்க்கு விற்றன.
* சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பூக்களின் விலை நேற்று சற்று உயர்ந்தது. நேற்றைய ஏலத்தில், 1,000 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ, 1,340 ரூபாய்க்கு ஏலம் போனது. இதேபோல், 275 ரூபாய்க்கு விற்ற முல்லை, 550 ரூபாய்; 225 ரூபாய்க்கு விற்ற காக்கடா, 500 ரூபாய்; செண்டுமல்லி-105, கோழிகொண்டை-135, கனகாம்பரம்-720, ஜாதிமுல்லை-650, சம்பங்கி-160, அரளி-170, துளசி-50, செவ்வந்தி-220 ரூபாய்க்கும் விற்பனையானது. ஆடிப்பெருக்கு, ஆடி அமாவாசையால் விலை உயர்ந்ததாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
* தாளவாடி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் தேங்காய் பருப்பு ஏலம் நேற்று நடந்தது. ஆறு மூட்டை வரத்தானது. ஒரு கிலோ, 79.25 ரூபாய் முதல் 86.69 ரூபாய்க்கு விலை போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த நிலக்கடலை ஏலத்துக்கு, 154 மூட்டை வந்தது. ஒரு கிலோ, 71.26 - 76.16 ரூபாய் என, 4.27 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.
* பவானி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, ௨,665 காய்கள் வரத்தாகின. ஒரு காய் ஏழு ரூபாய் முதல் 15 ரூபாய் வரை, 29 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.