ADDED : செப் 04, 2024 09:11 AM
* ஈரோடு மாவட்டம் கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 7,110 காய்கள் வரத்தாகின. ஒரு கிலோ, 28 ரூபாய் முதல் 3௭ ரூபாய் வரை விலை போனது. கொப்பரை தேங்காய் ஏலத்துக்கு, 893 மூட்டைகள் வரத்தாகின. ஒரு கிலோ முதல் தரம், 10௧ ரூபாய் முதல் 10௫ ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 75.42 ரூபாய் முதல் 103.15 ரூபாய் வரை, 44.41 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது.
* அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வேளாண் விளைபொருட்கள் ஏலம் நேற்று நடந்-தது. தேங்காய், 6,௦௦௦ காய்கள் வரத்தாகி ஒரு கிலோ, 22.25 - 30.55 ரூபாய்; தேங்காய் பருப்பு, 65 மூட்டை வரத்தாகி, கிலோ, 85.69 - 106.89; பருத்தி, 823 மூட்டை வரத்தாகி கிலோ, 73.29 - 81.59 ரூபாய் வரை விலை போனது.* எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்-துக்கு, 781 மூட்டை கொப்பரை தேங்காய் வரத்-தானது. முதல் தரம் கிலோ, 100.96 ரூபாய் முதல், 107.60 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 83.42 ரூபாய் முதல், 98.50 ரூபாய் வரை, 35,288 கிலோ கொப்பரை தேங்காய், 35.௫௯ லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.* அம்மாபேட்டை அருகே பூதப்பாடி ஒழுங்கு-முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த ஏலத்-துக்கு, 1,484 தேங்காய் வரத்தாகி, ஒரு காய் ஆறு ரூபாய் முதல் ௧௨ ரூபாய்; 11 மூட்டை நெல் வரத்தாகி, கிலோ, 25 ரூபாய் முதல் 31 ரூபாய்; 54 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி, கிலோ, 86 முதல் 103 ரூபாய்; 104 மூட்டை நிலக்கடலை வரத்தாகி, கிலோ, 70 முதல் 74 ரூபாய்; 15 முட்டை எள் வரத்தாகி, கிலோ, 97 ரூபாய் முதல், 118 ரூபாய்; 50 மூட்டை மக்காச்சோளம் வரத்-தாகி, ஒரு கிலோ, 28 ரூபாய்க்கும் ஏலம் போனது. மொத்தம், 124 குவிண்டால் வேளாண் விளை-பொருட்கள், 5.௯௦ லட்சம் ரூபாய்க்கு விற்பனை-யானது.* திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், நேற்று நடந்த ஏலத்துக்கு, 2,833 கிலோ எடையில், 59 தேங்காய் பருப்பு மூட்டை வந்தது. ஒரு கிலோ, 83.50 ரூபாய் முதல் 102.60 ரூபாய் வரை ஏலம் போனது.