/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக் அதாலத் நீதிமன்றம் 313 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத் நீதிமன்றம் 313 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : மார் 10, 2025 06:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: காங்கயம் வட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. காங்கேயம் வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் சார்பு நீதிபதியுமான சந்தான கிருஷ்ணசாமி தலைமை வகித்தார்.
மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, குடும்ப நல வழக்கு, சொத்து வழக்கு, மோட்டார் வாகன சிறு வழக்குகள் என, 380 வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதில், 313 வழக்குகளுக்கு, 6.௮6 லட்சம் ரூபாய் மதிப்பில் சமரசம் காணப்பட்டது.