/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
டூவீலரில் கடமான் கறி கொண்டு வந்தவர் கைது
/
டூவீலரில் கடமான் கறி கொண்டு வந்தவர் கைது
ADDED : ஆக 27, 2024 02:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் போக்குவரத்து போலீசார், காந்திநகர் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பல்சர் பைக்கில் வந்த ஒருவரை நிறுத்தி விசாரித்தனர். அவரிடம் இருந்த பையில், ஒன்றரை கிலோ அளவில் மான் கறி இருந்தது. விசாரணையில் ஆசனுார் அருகே கெத்தேசால் மலைகிராமத்தை சேர்ந்த பொம்மன், 23, என தெரிந்தது. சத்தி வனத்துறையின-ரிடம் அவரை
ஒப்படைத்தனர்.
ஊட்டி எஸ்டேட்டில் தங்கி வேலை செய்து வந்த பொம்மன், புலி வேட்டையாடி போட்டு சென்ற கடமானின் இறைச்சியை எடுத்து காயவைத்து, சொந்த ஊருக்கு கொண்டு செல்வதாக தெரி-வித்தார். இதனால் நீலகிரி மாவட்ட வனத்துறையினரிடம், பொம்-மனை ஒப்படைத்தனர்.

