/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
/
கீறி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது
ADDED : பிப் 22, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி அருகே மொடச்சூரை சேர்ந்த கூலி தொழிலாளி பொன்-னுசாமி, 60; கடந்த, 20ம் தேதி இரவு தனது வீட்டின் முன் அமர்ந்-திருந்தார். அதே பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம், 55; தன் வீட்டு முன் தண்ணீர் தேங்கியது தொடர்பாக இருந்த முன்பகை காரண-மாக, பொன்னுசாமியிடம் முன் விரோதம் கொண்டிருந்தார்.
இதனால் தகாத வார்த்தை பேசி, சிறு கத்தியால் பொன்னுசாமி கழுத்தில் கீறி, கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து பொன்-னுசாமி புகாரின்படி, ஆறுமுகத்தை கோபி போலீசார் நேற்றிரவு கைது செய்தனர்.

