ADDED : செப் 03, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்: ஈரோடு மாவட்டம் அரச்சலுாரை சேர்ந்தவர் சபாபதி, 30; திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. காங்கேயம், அகஸ்திலிங்கம்பாளையத்தில், கார் மெக்கானிக் தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் பட்டறையில் பழுது பார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். இயந்திரத்தை கொண்டு காரை மேலே துாக்கி நிறுத்தி விட்டு, அடியில் படுத்து பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராதவிதமாக கார் நழுவி சபாபதியின் தலை மற்றும் மார்பின் மீது விழுந்தது. இதனால் வெளியே வர முடியாமல் சிக்கி தவித்தார். சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனையில் கொண்டு சென்றனர். டாக்டர் பரிசோதனையில் அவர் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. காங்கேயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.