/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கு.க., செய்த இளம்பெண் சாவு குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்
/
கு.க., செய்த இளம்பெண் சாவு குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்
கு.க., செய்த இளம்பெண் சாவு குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்
கு.க., செய்த இளம்பெண் சாவு குடும்பத்துக்கு அமைச்சர் ஆறுதல்
ADDED : மே 01, 2024 01:55 PM
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை அடுத்த கோடேபாளையம் ஆதிதிராவிடர் காலனி பன்னீர்செல்வம் மனைவி துர்கா. புன்செய்புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆண் குழந்தை பிறந்த நிலையில், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை நடந்தது. இதனால் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.
குடும்ப கட்டுப்பாடு செய்தபோது மருத்துவர்களின் தவறான சிகிச்சையே காரணம் என்று கூறி, துர்கா சடலத்துடன் மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.
இந்நிலையில் அமைச்சர் முத்துசாமி, துர்கா வீட்டுக்கு நேற்று சென்றார். பிறந்து பத்து நாட்களே ஆன குழந்தையை கையில் ஏந்தியபடி, அவரது கணவர் மற்றும் பெற்றோருக்கு ஆறுதல் கூறினார். தி.மு.க., சார்பில் நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
அதை தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி கூறியதாவது: பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கலெக்டரிடமும் புகாரளித்துள்ளனர். அதில் நிதியுதவி மற்றும் மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோரியுள்ளனர். பிரேத பரிசோதனை ஆய்வறிக்கை அடிப்படையில் கலெக்டர் நடவடிக்கை அமையும். இவ்வாறு கூறினார்.