/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மொபட் பழுதால் நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு ரூ.௧.௩௬ லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

ADDED : ஜூலை 28, 2024 03:05 AM
பெருந்துறை: பெருந்துறை, மேக்கூர், ராஜா வீதியை சேர்ந்த காய்கறி வியாபாரி பழனிசாமி. ஈரோடு, காரைவாய்க்காலில் ஸ்ரீசக்ரா எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தில், 2022 ஜன., 5ம் தேதி, ௧.௦௧ லட்சம் ரூபாய் செலுத்தி, எலக்ட்ரிக் மொபட் வாங்கினார். பத்து மாதம் கழிந்த நிலையில் அடிக்கடி பழுதானது. வண்டி விற்பனை செய்த-போது ஓராண்டு காலம் எந்த பழுதானாலும் சரி செய்து கொடுக்-கப்படும் என்று உத்தரவாதம் தந்துள்ளனர். ஆனால், பழுதுகளை சரி செய்ய இரண்டு ஆண்டுகளில், 40 ஆயிரம் ரூபாய் வரை வசூ-லித்துள்ளனர்.
இதனால் ஈரோடு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், பழனிசாமி வழக்கு தொடர்ந்தார். வாகனத்தை விற்பனை செய்த ஸ்ரீசக்ரா எலக்டரிக் மோட்டார்ஸ், வாகனத்தை தயாரித்த தேனி பைக் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஆணைய தலைவர் பூரணி, உறுப்பினர்கள் வேலுசாமி, வரதராஜ பெருமாள் தீர்ப்பளித்தனர். புகார்தாரர் வாங்-கிய மொபட்டுக்கு செலுத்திய தொகை, ௧.௦௧ லட்சம் ரூபாயை, எதிர்தரப்பினர்கள் கூட்டாகவும், தனித்தனியாகவும் புகார்தார-ருக்கு செலுத்த வேண்டும். சேவை குறைபாட்டால் புகார்தார-ருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு, 25,000 ரூபாய், வழக்கு செலவு தொகையாக, 10,000 ரூபாயை செலுத்த உத்தரவிட்டு, இரண்டு மாத அவகாசமும் வழங்கி தீர்ப்
பளித்தனர்.