/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
'ஈரோடு வளர்ச்சிக்காகவே எனது பொது வாழ்வு' தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களிடம் உருக்கம்
/
'ஈரோடு வளர்ச்சிக்காகவே எனது பொது வாழ்வு' தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களிடம் உருக்கம்
'ஈரோடு வளர்ச்சிக்காகவே எனது பொது வாழ்வு' தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களிடம் உருக்கம்
'ஈரோடு வளர்ச்சிக்காகவே எனது பொது வாழ்வு' தி.மு.க., வேட்பாளர் வாக்காளர்களிடம் உருக்கம்
ADDED : ஏப் 18, 2024 01:26 AM
ஈரோடு, ஈரோடு லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் கே.இ.பிரகாஷ், பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட மணல்மேடு, புதுமை காலனி, மரப்பாலம், சிதம்பரம் காலனி, ராஜாகாடு, சூரம்பட்டி, கிராமடை, முத்தம்பாளையம், வீரப்பம் பாளையம், இடையன்காட்டுவலசு உட்பட பல்வேறு பகுதிகளில் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி தலைமையில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வாக்காளர்களிடம் வேட்பாளர் கே.இ.பிர காஷ், உதய சூரியன் சின்னத்துக்கு ஓட்டு கேட்டு பேசியதாவது: ஈரோடு லோக்சபா தொகுதியை சென்னை, கோவை போன்ற வளமான நகரங்களுக்கு இணையாக கட்டமைக்க வேண்டும் என்பதற்காக, நான் பல்வேறு திட்டங்களை வைத்துள்ளேன். தமிழகத்தை வஞ்சித்து வரும் மத்திய பா.ஜ., அரசு கொடுக்கும் சொற்ப நிதியை வைத்து, இன்றைய இந்தியாவே வியந்து பார்க்கும் திட்டங்களை செயல்படுத்தி வரும் தமிழக முதல்வரால், வரும் நாட்களில் நாம் எதிர்பார்க்கும் மத்திய அரசு அமைந்தால், தற்போதைய சூழலில் கிடைக்கும் திட்டங்களை விட, பல ஆயிரம் மடங்கு நல்ல திட்டங்களை நிறைவேற்ற இயலும்.
ஈரோட்டின் வளர்ச்சிக்காக அமைச்சர் சு.முத்து
சாமி செயல்படுத்திய திட்டங்கள் எண்ணற்றவை. அவரது பெயரை குறிப்பிடும்படியான திட்டங்களை அவர் செயல்படுத்தியதுபோல, நல்ல திட்டங்களை
பெற்றுத்தருவேன்.
மாநில அரசின் திட்டங்கள் மட்டுமின்றி, மத்திய அரசின் திட்டங்களும் இணைந்து செயல்படுத்தப்படும்போது, பெரிய அளவிலான திட்டங்களை மிக எளிதாக நிறைவேற்ற இயலும்.
இவ்வாறு பேசினார்.
மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திருவாசகம், அக்னி சந்துரு உட்பட கூட்டணி கட்சியினர் உடன் வந்தனர்.

