/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வரத்து அதிகரிப்பால் மைசூரு சி.வெங்காயம் விலை குறைவு
/
வரத்து அதிகரிப்பால் மைசூரு சி.வெங்காயம் விலை குறைவு
வரத்து அதிகரிப்பால் மைசூரு சி.வெங்காயம் விலை குறைவு
வரத்து அதிகரிப்பால் மைசூரு சி.வெங்காயம் விலை குறைவு
ADDED : ஆக 02, 2024 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புன்செய் புளியம்பட்டி
புன்செய்புளியம்பட்டி நகராட்சி வாரச்சந்தை நேற்று நடந்தது. ஈரோடு மட்டுமின்றி திருப்பூர், துறையூர், நாமக்கல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சின்ன வெங்காயம் மற்றும் விதை வெங்காயம், ஆயிரக்கணக்கான மூட்டைகள்
வரத்தாகின.
இதில் கர்நாடக மாநிலம் மைசூரு சுற்றுவட்டார பகுதியில் இருந்து சின்ன வெங்காயம் அதிகம் வரத்தானது. அங்கு கன மழை பெய்து வருவதால் ஈரப்பதம் அதிகளவில் காணப்பட்டது. இதனால் விலை குறைந்தது. கடந்த சில வாரங்களாக கிலோ, 60 ரூபாய் வரை விற்ற நிலையில், 15 முதல் 25 ரூபாய்க்கு நேற்று விற்றது. இதனால் மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர்.