/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர் மாநில பேச்சு போட்டிக்கு தேர்வு
/
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர் மாநில பேச்சு போட்டிக்கு தேர்வு
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர் மாநில பேச்சு போட்டிக்கு தேர்வு
நம்பியூர் குமுதா பள்ளி மாணவர் மாநில பேச்சு போட்டிக்கு தேர்வு
ADDED : ஜூன் 30, 2024 03:53 AM
ஈரோடு: காமராஜரின், 122வது பிறந்தநாளை முன்னிட்டு, ஈரோடு மாவட்ட அளவில், நம்பியூர் செல்லிபாளையம் காமராஜர் மெட்ரிக் பள்ளியில் பேச்சுப்போட்டி நடந்தது. இதில் குமுதா பள்ளி மாணவ, மாணவியரும் பங்கேற்றனர்.
இதில் மேல்நிலை வகுப்பு போட்டியில் பிளஸ் ௧ மாணவி மேகவர்ஷினி முதலிடம் பிடித்து, 7,000 ரூபாய் பரிசுத்தொகை வென்றார். பிளஸ் ௧ மாணவி கவிதர்ஷினி, இரண்டாமிடம் பிடித்து, 5,000 ரூபாய் பரிசுத்தொகை பெற்றார். ஆறு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான போட்டியில் ஆறாம் வகுப்பு மாணவி தனுஷ்யா, மூன்றாமிடம் பிடித்து, 3,000 ரூபாய் பரிசு பெற்றார். எட்டாம் வகுப்பை சேர்ந்த ரிஷிக் ஆர்யா, கவுசிமா ஆறுதல் பரிசு பெற்றனர். இந்த வெற்றி மூலம், விருதுநகரில் நடக்கவுள்ள உள்ள மாநில அளவிலான காமராஜர் தின பேச்சு போட்டிக்கு தேர்வு பெற்றுள்ளனர். பரிசு பெற்ற மாணவ, மாணவியரை குமுதா பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி, செயலர் டாக்டர் அரவிந்தன், இணை செயலர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.