/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பில் அலட்சியம்;நம்பியூர் தாலுகா அலுவலகம் முற்றுகை

ADDED : ஏப் 09, 2024 01:52 AM
நம்பியூர்:நம்பியூரை அடுத்த கடத்துார், தட்டாம்புதுாரில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
நம்பியூர்-சத்தி செல்லும் முக்கிய இணைப்பு சாலையாக கடத்துார் சாலை உள்ளது. இதில் தங்கம் நகர் பகுதியில், தனிநபர் ஒருவர் சாலை ஒட்டியுள்ள, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து இருபுறமும் கம்பி வேலி அமைத்துள்ளார்.இதனால் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக, இப்பகுதி மக்கள் பலமுறை கடத்துார் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளனர். ஆனால், போலீசார் மட்டுமின்றி தாலுகா அலுவலக அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், 200க்கும் மேற்பட்டோர் நம்பியூர் தாசில்தாரை கண்டித்து, தாலுகா அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தாசில்தார் மாலதி சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஒரு சில நாட்களில் நிலம் அளவீடு செய்யப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தால் உடனடியாக அகற்றி தீர்வு காணப்படும் என்று உறுதியளிக்கவே போராட்டத்தை மக்கள் கைவிட்டனர்.