/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாலமலை அடிவாரத்தில் கரடி நடமாட்டத்தால் பீதி
/
பாலமலை அடிவாரத்தில் கரடி நடமாட்டத்தால் பீதி
ADDED : மே 01, 2024 02:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:அம்மாபேட்டை அருகே பாலமலை உள்ளது.மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாக விளங்கும் இம்மலை முற்றிலும் சேலம் மாவட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பாலமலை
உச்சியில் பிரசித்தி பெற்ற சித்தேஸ்வரன் கோவில் உள்ளது.
இந்நிலையில் ஓலையூர் அருகே பாலமலை வனப்பகுதியில் பெரிய ஊத்து என்ற
இடத்தில், ஒரு கரடி, இரண்டு குட்டிகளுடன் வனப்பகுதியில் நேற்று இரை
தேடி கொண்டிருந்தது. அப்பகுதியில் மாடு மேய்க்க சென்றவர்கள்
பார்த்துள்ளனர்.
கரடி நடமாட்டம் உள்ளதால் அப்பகுதியில் தேவையின்றி யாரும் செல்ல வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.