/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
துர்நாற்றம் வீசும் குளத்தால் கடம்பூர் மலையில் அச்சம்
/
துர்நாற்றம் வீசும் குளத்தால் கடம்பூர் மலையில் அச்சம்
துர்நாற்றம் வீசும் குளத்தால் கடம்பூர் மலையில் அச்சம்
துர்நாற்றம் வீசும் குளத்தால் கடம்பூர் மலையில் அச்சம்
ADDED : ஜூன் 10, 2024 02:00 AM
சத்தியமங்கலம்: கடம்பூர் மலையில் குத்தியாலத்துார் ஊராட்சி ஏரியூர் கிராமத்தில், 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரின் அருகில் குளம் உள்ளது. குளத்தில் கழிவு நீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. கொசு உற்பத்தி அதிகரித்து, தொற்று நோய் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. விஷ குளத்தை ஒட்டியுள்ள தைலமரங்கள் வேரோடு சாயும் நிலையில் உள்ளது.
குளத்தின் குறுக்கே மின் கம்பிகள் செல்வதால் மரம் முறிந்து விழுந்தால், மின் கம்பத்தின் மீது தான் விழும். இதனால் மின்சாரம் கசிந்து உயிரிழப்பு ஏற்படும் நிலையில் உள்ளது. குளத்தை சுத்தம் செய்தும், மின்கம்பிகள் மீது விழ காத்திருக்கும் தைல மரங்களையும் அப்புறப்படுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.