/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பஞ்., துணை தலைவர் கலெக்டர் ஆபீசில் மனு
/
பஞ்., துணை தலைவர் கலெக்டர் ஆபீசில் மனு
ADDED : செப் 03, 2024 04:11 AM
ஈரோடு: சென்னிமலை யூனியன் வாய்ப்பாடி பஞ்., துணை தலைவர் விஜயலட்சுமி, ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: வாய்ப்பாடி பஞ்., 4வது வார்டு உறுப்பினராகவும், துணை தலைவராகவும் பணி செய்கிறேன். சென்னிமலை வட்டாரத்தில் 'வட்டார ஒருங்கிணைப்பாளர்' பணி செய்யும் ஒரு பெண், தவறாக வழி நடத்தி, மகளிர் குழு செயல்பாட்டுக்கான 'ஆப்'பில் தவறாக பதிவு செய்கிறார்.
கிராம வறுமை ஒழிப்பு சங்கம், மகளிர் குழு கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள், மற்ற நிர்வாகிகளின் கையெழுத்தை பதிவு செய்து பணம் பெற்றுள்ளனர். மகளிர் குழு உறுப்பினர்கள், சில நிர்வாகிகளுக்கு தெரியாமல், அவர்கள் பெயரில் பணத்தை பெற்றும், கூடுதல் தொகையை பெற்றும் முறைகேடு நடந்துள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.