/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இயல்பு நிலைக்கு திரும்பிய காவிரி கரையோர மக்கள்
/
இயல்பு நிலைக்கு திரும்பிய காவிரி கரையோர மக்கள்
ADDED : ஆக 05, 2024 06:32 PM
ஈரோடு:காவிரி ஆற்றில் வெள்ளம் குறைய துவங்கியதால், கரையோர மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர்.
மேட்டூர் அணை நிரம்பி, ஆறு நாட்களுக்கு மேலாக உபரி நீர் திறக்கப்பட்டு, காவிரி ஆற்றில், 1.70 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் சென்றது. ஈரோடு மாவட்டத்தில் பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி உள்ளிட்ட காவிரி கரையோர பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. குடியிருப்பு பகுதியை வெள்ள நீர் சூழ்ந்தது.
முன்னதாக, மாவட்ட அளவில், 41 இடங்களில் வெள்ள அபாயம் கண்டறியப்பட்டு, தடுப்பு ஏற்படுத்தினர். 77 முகாம்கள் ஏற்படுத்தி, அந்தந்த பகுதியில் தாழ்வான பகுதியில் வசிப்போரை தங்க வைத்தனர். நேற்று முன்தினம், 70,000 கன அடி நீர் வெளியேறும் நிலையில், வெள்ளம் குறைந்து, கரைகளுக்குள் அடங்கி செல்கிறது.
இதனால் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் தங்கள் இயல்பு நிலைக்கு திரும்பினர். முகாம்களில் தங்கியவர்கள் நேற்று முன்தினம் இரவு முதல் தங்கள் வீடுகளில் தங்க துவங்கினர். முகாம்கள் மூடப்பட்டன. இருப்பினும், வருவாய் துறையினர், போலீஸ், பொதுப்பணித்துறை, நீர் வளத்துறையினர், உள்ளாட்சி அமைப்பினர் கரையோர பகுதிகளை கண்காணிக்கின்றனர்.