/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
களத்தில் பெரம்பலுார் குரூப் விரக்தியில் தி.மு.க.,வினர்
/
களத்தில் பெரம்பலுார் குரூப் விரக்தியில் தி.மு.க.,வினர்
களத்தில் பெரம்பலுார் குரூப் விரக்தியில் தி.மு.க.,வினர்
களத்தில் பெரம்பலுார் குரூப் விரக்தியில் தி.மு.க.,வினர்
ADDED : மார் 31, 2024 04:20 AM
பு.புளியம்பட்டி: தேர்தல் பணி மற்றும் பணம் பட்டுவாடாவுக்கு உள்ளூர் கட்சியினரை நம்பாமல், பெரம்பலுாரை சேர்ந்த உறவினர், நண்பர்கள் மற்றும் கல்லுாரி ஊழியர்களை, நீலகிரி லோக்சபா தொகுதி தி.மு.க.,வேட்பாளர் ஆ.ராசா களமிறக்கியுள்ளார். இவர், 2009ல் இதே தொகுதியில் வென்று, மத்திய அமைச்சரானார். 2014 தேர்தலில், தோல்வியடைந்து, 2019ல் போட்டியிட்டு வெற்றி பெற்றார். நான்காவது முறையாக தொடர்ந்து களம் காண்கிறார்.
கடந்த தேர்தல்களில், வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக, தி.மு.க., நிர்வாகிகளிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது. இதில் பவானிசாகர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட, சில நிர்வாகிகள், பட்டுவாடா செய்யாமல் பதுக்கி விட்டனர். இதுகுறித்து ராசா கவனத்துக்கு செல்லவே, பதுக்கிய நிர்வாகிகளுக்கு டோஸ் விட்டார்.
இதை மனதில் வைத்து, தேர்தல் பணி, பண பட்டுவாடா உள்ளிட்ட தேர்தல் செலவுகளை கண்காணிக்க, பெரம்பலுாரை சேர்ந்த தனது உறவினர் மற்றும் நண்பர்கள், கல்லுாரி ஊழியர்களை, தொகுதியில் களமிறக்கியுள்ளார். இதனால் பணம் சுருட்டிய பவானிசாகர் தொகுதி தி.மு.க.,வினர் விரக்திக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

