/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு
/
காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு
காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு
காவிரிக்கரையில் பனை விதை நடவு; 14ல் துவங்க ஏற்பாடு
ADDED : செப் 01, 2024 04:07 AM
ஈரோடு: ஈரோடு மாவட்ட காவிரி கரையில் பனை விதைகள் நடும் பணி வரும், 14ல் துவங்க உள்ளது.
இதுபற்றி, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியதாவது: தமிழ்நாடு தன்னார்வலர் அமைப்பு, தமிழ்நாடு பசுமை இயக்கம் உள்ளிட்டவை இணைந்து, காவிரி கரையில், ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியை, ராமேஸ்வரத்தில், கடந்த ஜூலை, 27 ல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் துவக்கி வைத்தார்.இன்று முதல் தமிழகம் முழுவதும் பனை விதை சேகரிப்பும், ஐந்து கட்டமாக பனை விதைகள் நடும் பணி ஒகேனக்கல் முதல் பூம்புகார் வரையும், தர்மபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, மயிலாடுதுறை என, 8 மாவட்டங்களில் காவிரி கரையின், 2 புறமும், 416 கி.மீ., தொலைவுக்கு நடக்க இருக்கிறது. ஈரோடு மாவட்ட காவிரி கரையில் வரும், 14ல் பனை விதைகள் நடப்பட உள்ளது. இதில் பங்கேற்க இருக்கும் மாணவ, மாணவியர், சமூக சேவகர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள், udhavi.app/panai என்ற இணைய தளம்