/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மருத்துவ கல்லுாரியில் கூடுதல் கட்டடம் கட்ட ஆலோசனை
/
மருத்துவ கல்லுாரியில் கூடுதல் கட்டடம் கட்ட ஆலோசனை
ADDED : ஜூலை 10, 2024 02:51 AM
ஈரோடு:பெருந்துறையில்
உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், 34 கோடி
ரூபாயில் கூடுதல் கட்டடடம் கட்டுவது குறித்த ஆலோசனை கூட்டம்
நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தார்.
இதை
தொடர்ந்து மருத்துவமனையில் செயல்படும் சீமாங் (மகளிர் மற்றும்
மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள்) கட்டடத்தின் விரிவாக்க பணி,
மாணவர் பயிற்றுவிப்பு அறை, நமக்கு நாமே திட்டத்தில், 50 லட்சம் ரூபாய்
மதிப்பில் மருத்துவமனையில் நடக்கும் பராமரிப்பு பணியை கலெக்டர் ஆய்வு
செய்தார்.
மருத்துவ கல்லுாரி மருத்துவமனை முதல்வர்
செந்தில்குமார், துணை முதல்வர் மோகனசவுந்திரம், மருத்துவ
கண்காணிப்பாளர் செந்தில் செங்கோடன் உட்பட பலர் கூட்டத்தில்
பங்கேற்றனர்.