தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து தி.மு.க., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்


ADDED : நவ 01, 2026 06:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 01, 2026 06:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே, ஒருங்கிணைந்த ஈரோடு மாவட்ட, தி.மு.க., மகளிரணி சார்பில், தமிழகத்தில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க., மகளிரணி அமைப்பாளர் திலகவதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சவுண்டம்மாள், ஈரோடு மேயர் நாகரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிரணி மாநில செய்தி தொடர்பாளர் நாகநந்தினி, த.வெ.க., அரசில் விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, மின்தடை, கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதல், பெண்கள் - குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பேசினார்.

ஈரோடு எம்.பி., பிரகாஷ், ஈரோடு வடக்கு மாவட்ட செயலர் நல்லசிவம், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் வெங்கடாசலம், சந்திரகுமார், நிர்வாகிகள் செல்லபொன்னி, திண்டல்குமாரசாமி, கீதாநடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us