ADDED : நவ 01, 2026 06:12 AM
பவானி:பவானி, அந்தியூர்
பகுதியில், ஏ.ஐ.டி.யு.சி., சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட பொதுச்செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில்,
தமிழக அரசு, மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியம், கட்டட தொழிலாளர்
வாரியம், உடல் உழைப்பு தொழிலாளர் நல வாரியங்களுக்கு, முத்தரப்பு
குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். குறைந்த பட்ச ஊதிய
சட்டத்தில் மாதம், 42,000 ரூபாய் நிர்ணயம் செய்து, அகவிலைப்படியோடு
சேர்த்து அறிவித்து அமல்படுத்த வேண்டும்.
பெண் தொழிலாளர்களுக்கு,
மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் விடுமுறை வழங்க சட்டம் இயற்ற
வேண்டும். கட்டுமான தொழிலாளர் வாரியத்தில் பதிவு செய்த அனைவருக்கும்
தீபாவளி போனஸ் வழங்க வேண்டும். கட்டட தொழிலாளர்களுக்கு
ஓய்வூதியம், 6,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட
பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல், கோபியில்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்டக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன்,
சத்தியமங்கலம் புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு,
மாவட்ட துணை தலைவர் ஸ்டாலின் சிவகுமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
