/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து புளியம்பட்டியில் 2வது நாளாக போராட்டம்
/
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து புளியம்பட்டியில் 2வது நாளாக போராட்டம்
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து புளியம்பட்டியில் 2வது நாளாக போராட்டம்
தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து புளியம்பட்டியில் 2வது நாளாக போராட்டம்
ADDED : பிப் 24, 2025 04:41 AM
பு.புளியம்பட்டி,: தி.மு.க., கவுன்சிலரை கண்டித்து புளியம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட்டில் கடைகளை அடைத்து இரண்டாவது நாளாக வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புன்செய்புளியம்பட்டி தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் தி.மு.க., நகர செயலாளரும், நகரமன்ற துணைத்தலைவருமான சிதம்பரத்தின் மகன் சந்தன பாரதி மற்றும் 15வது வார்டு தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் சிவசண்முகம் ஆகியோர் காய்கறி மார்க்கெட்டில் மின் இணைப்பை துண்டித்தும், பெண் வியாபாரிகளை உள்ளே வைத்து நுழை
வாயிலை பூட்டி வியாபாரிகளை தரக்குறைவாக பேசி இழிவு படுத்துவதாக கூறி நகராட்சி கமிஷனர் மற்றும் புளியம்பட்டி போலீசில் புகார் அளித்திருந்த நிலையில் தி.மு.க., நிர்வாகிகளை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் நேற்று முன்தினம் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டாம் நாளான நேற்றும், 90க்கும் மேற்பட்ட கடைகள் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டன. மார்க்கெட் திறக்கப்
படாததால் கத்திரி, வெண்டை, கொத்தமல்லி, கருவேப்பிலை, கீரை உள்ளிட்ட காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகள், சாலையோரத்தில் அமர்ந்து விற்பனையில் ஈடுபட்டனர்.
தி.மு.க., நகர செயலாளரின் மகன், தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை கடையடைப்பு போராட்டம் நடக்கும் என்று, தினசரி காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.