/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
/
ரயில்வே பணிமனை தொழிலாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 22, 2025 05:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு ரயில்வே பணிமனை தொழிலாளர்கள், எஸ்.ஆர்.எம்.யூ., சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். கிளை செயலாளர் தர்மன் தலைமை வகித்தார். கிளை தலைவர் ராஜேந்திரன், பக்த-வச்சலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். அவுட் சோர்சிங், ஆள் குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும்.
லட்சக்கணக்கான காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கடந்த, 2023 ஜன., 1 முதல் அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க வேண்டும். பயோ மெட்ரிக் அனைத்து தொழிலாளர்களுக்கும் கொண்டு வரும் முடிவை கைவிட்டு, 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும் என்பன உள்-ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

