/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிற மாநில மழையால் ஜவுளி விற்பனை மந்தம்
/
பிற மாநில மழையால் ஜவுளி விற்பனை மந்தம்
ADDED : செப் 04, 2024 09:32 AM
ஈரோடு: கர்நாடகா, ஆந்திராவில் கடும் மழை, வெள்-ளத்தால் ஈரோடு ஜவுளி சந்தையில் வர்த்தகம் குறைந்தது.
ஈரோட்டில் நேற்று கனி மார்க்கெட் ஜவுளி சந்தை நடந்தது. தீபாவளிக்கு, 57 நாட்களே உள்ளதால், புத்தாடை, தைக்கப்படாத துணிகள், துண்டு, வேட்டி, நைட்டி, அனைத்து வகை உள்ளாடைகள் என புதியவை வரத்துவங்கி உள்ளது. சாலை-யோர கடைகள், குடோன்கள், வாகனங்களில் வைத்தும் பல்வேறு வகை ஆயத்த ஆடைகள் விற்பனைக்கு வைத்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதி, மஹராஷ்டிரா உட்பட சில பகுதி வியாபா-ரிகள், கடைக்காரர்கள் மட்டுமே ஜவுளிகளை வாங்கி சென்றனர்.
இதுபற்றி வியாபாரிகள் கூறியதாவது: கேர-ளாவில் ஓணம் பண்டிகை வர உள்ளது. அதே-நேரம் வயநாடு நிலச்சரிவு பேரிடரால், ஓணம் பண்டிகையுடன், வயநாட்டு மக்களின் வாழ்வா-தாரத்துக்கு உதவ அம்மாநில முதல்வர் வேண்-டுகோள் விடுத்ததால், அங்குள்ள வியாபாரிகள், கடைக்காரர்கள் வரவில்லை. குறைந்த எண்-ணிக்கையில் வந்தனர்.கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்-களில் கடும் மழையால், அங்கிருந்தும் வியாபா-ரிகள், கடைக்காரர்கள், மொத்த விற்பனையா-ளர்கள் வரவில்லை. தமிழகம் உட்பட சில பகுதி பொதுமக்கள், வியாபாரிகள், கடைக்காரர்கள் மட்டுமே வந்ததால் சில்லறை விற்பனை, 30 சத-வீதம் வரையும், மொத்த விற்பனை, 20 சதவீதம் வரை நடந்தது.இவ்வாறு கூறினர்.