/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பாதாள சாக்கடை திட்டத்தில் சேதமான மேன் ஹோல் மாற்றம்
/
பாதாள சாக்கடை திட்டத்தில் சேதமான மேன் ஹோல் மாற்றம்
பாதாள சாக்கடை திட்டத்தில் சேதமான மேன் ஹோல் மாற்றம்
பாதாள சாக்கடை திட்டத்தில் சேதமான மேன் ஹோல் மாற்றம்
ADDED : மே 22, 2024 06:28 AM
ஈரோடு :ஈரோடு மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்டம், 53 வார்டுகளில் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக, 525 கி.மீ., நீளத்துக்கு பாதாள கழிவு நீர் குழாய்களும், 21 ஆயிரத்து, 141 மேன் ஹோல் சேம்பர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
தற்போது பயன்பாட்டில் உள்ள பகுதிகளில், மேன் ஹோல் சேம்பர்களை, பராமரிப்பு பணிகளுக்காக அடிக்கடி திறப்பதாலும், அதிக எடை கொண்ட கனரக வாகனங்கள் ஏறிச் சென்றதாலும், சேம்பர்கள் பல இடங்களில் உடைந்து விட்டன. இதனால் சில சமயங்களில் விபத்தும் ஏற்படுகிறது. இந்நிலையில் சேதமான சேம்பர்களை மாற்றி, புதியதாக அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக மேன் ஹோல் மூடிகளை, ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
அதிக எடை உள்ள கனரக வாகனங்கள் செல்லும் சாலையில் உள்ள மேன் ஹோல் சேம்பர்களானது 40 மெட்ரிக் டன் எடை தாங்கும் திறன் உள்ள சேம்பர்களாகவும், குறைந்த போக்குவரத்து மற்றும் நடுத்தர அளவு எடை உள்ள கனரக வாகனங்கள் செல்லும் சாலையில், 25 மெட்ரிக் டன் தாங்கும் திறன் உள்ள சேம்பர்களாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.இதில் முதல்கட்டமாக, 40 மெட்ரிக் டன் தாங்கும் திறன் கொண்ட, ௧௦௦ சேம்பர்கள்; 25 மெட்ரிக் டன் எடை தாங்கும் சேம்பர்கள், 78ம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

