/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தண்ணீர் பிரச்னையில் தவிக்கும் பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
/
தண்ணீர் பிரச்னையில் தவிக்கும் பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
தண்ணீர் பிரச்னையில் தவிக்கும் பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
தண்ணீர் பிரச்னையில் தவிக்கும் பிரதமரின் அடுக்குமாடி குடியிருப்புவாசிகள்
ADDED : ஆக 06, 2024 01:42 AM
ஈரோடு, கொடுமுடி அருகே இச்சிப்பாளையம் பஞ்.,ல், நகர்புற மேம்பாட்டு வாரியம் மூலம், பிரதமரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டி கொடுத்துள்ளனர்.
இங்கு வசிக்கும் நுாற்றுக்கும் மேற்பட்டோர், ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் மனு வழங்கி கூறியதாவது: இச்சிப்பாளையம் கிராமத்தில் நகர்புற மேம்பாட்டு வாரியம் மூலம் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில், 280 வீடுகள் உள்ளன. அதில், 150 வீடுகளில் மக்கள் வசிக்கின்றனர். எங்களுக்காக தனியாக ஆழ்குழாய் கிணறு அமைத்து, சில மாதங்கள் தண்ணீர் வழங்கினர்.
தற்போது போர்வெல்லில் தண்ணீர் இல்லாததாலும், மின் மோட்டார் பழுதானதாலும் சில நாட்களாக தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள, 150 வீடுகளில் வசிக்கும், 600க்கும் மேற்பட்டோர் தண்ணீரின்றி சிரமப்படுகிறோம். இச்சிபாளையம் பஞ்சாயத்தில் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. ஆழ்துளை கிணற்றை மேலும் ஆழப்படுத்தியும், மின் மோட்டாரை உடன் சரி செய்தும், தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், குடியிருப்பு பகுதிக்கு பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைக்கு செல்வோர் சிரமப்படுகின்றனர். இது தொடர்பாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.