/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: ஈரோட்டில் 2 பேர் கைது
/
பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: ஈரோட்டில் 2 பேர் கைது
பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: ஈரோட்டில் 2 பேர் கைது
பேராசிரியரிடம் ரூ.17 லட்சம் மோசடி: ஈரோட்டில் 2 பேர் கைது
ADDED : ஏப் 26, 2024 02:19 AM
ஈரோடு:சத்தியமங்கலம் பேராசிரியரிடம் ஆன்லைன் வர்த்தக ஆசை காட்டி, 17 லட்சம் ரூபாய் மோசடி செய்த இருவரை, போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்த பேராசிரியர் ஒருவர், பகுதி நேர வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருந்தார்.
அவரது டெலிகிராம் மூலம் மர்ம நபர்கள், பகுதி நேர வேலை வாய்ப்பு உள்ளதாக கூறினர். 'யூடியூப்'பில் சில வீடியோ லிங்க், விளம்பர லிங்குகளை அனுப்பி, 'லைக் மற்றும் ேஷர்' செய்யும்படி கூறினர். அதற்காக தலா, 500 ரூபாய் கட்டணம் என பெற்றுள்ளனர்.
பேராசிரியரை நம்ப வைக்க, சிறிய, சிறிய தொகைகளை அனுப்பினர். அத்துடன் பங்கு சந்தை, ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம் என ஆசை வார்த்தை கூறி, ஒரு லட்சம் ரூபாய் முதல், 5 லட்சம் ரூபாய் வரை என பல தவணைகளில், 17 லட்சம் ரூபாயை பெற்றனர். பணத்தை முதலீடு செய்த பின், 5,000 ரூபாயை மட்டுமே அவர் வங்கி கணக்குக்கு அனுப்பினர்.
இதனால் பணத்தை திரும்ப தர வலியுறுத்தினார். பணம் கிடைக்காததால் ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் கடந்த ஜன.,ல் புகார் செய்தார். சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் சித்ராதேவி தலைமையில் விசாரணை நடந்தது.
மர்ம நபர்களின் வங்கி பரிவர்த்தனை அடிப்படையில், சேலம், அன்னதானபட்டியை சேர்ந்ச நந்தகோபாலன், 38, சாமிநாதன், 39, என்பதை கண்டுபிடித்தனர்.
இருவரையும் கைது செய்து ஆறு லட்சத்து, 72,600 ரூபாய்; ஏழு ஸ்மார்ட் போன், 19 ஏ.டி.எம்., கார்டு, எட்டு சிம்கார்டு, 15 வங்கி காசோலை புத்தகங்கள், சிறிய ஏ.டி.எம்., ஸ்வைப்பிங் மிஷின் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ராஜேந்திரன் கூறியதாவது:
இதில் வேறு நபர்களுக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடக்கிறது. பலரது பெயரில் இவர்கள் வங்கி கணக்கு துவங்கி, செக் புக், ஏ.டி.எம்., கார்டு பெற்றுள்ளனர். இவ்வாறு கூறினார்.

