/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.5.71 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
/
ரூ.5.71 லட்சத்துக்கு விளை பொருட்கள் விற்பனை
ADDED : ஆக 01, 2024 02:13 AM
ஈரோடு: மொடக்குறிச்சி, உப ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 21 ஆயிரத்து,245 தேங்காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். ஒரு கிலோ தேங்காய், 24.69 முதல், 29.40 ரூபாய் வரை விற்ப-னையானது. மொத்தம், 8,513 கிலோ எடை கொண்ட தேங்காய், இரண்டு லட்சத்து, 36 ஆயிரத்து, 711 ரூபாய்க்கு விற்பனையா-னது.
கொப்பரை தேங்காய், 131 மூட்டைகளில் விற்பனைக்கு கொண்டு வந்தனர். முதல் தரம் ஒரு கிலோ, 88.05 முதல், 96 ரூபாய் வரையிலும், இரண்டாம் தரம் ஒரு கிலோ, 66.88 முதல், 87.91 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 3,707 கிலோ எடை கொண்ட கொப்பரை தேங்காய், மூன்று லட்சத்து, 34 ஆயிரத்து,3 98 ரூபாய்க்கு விற்பனையானது.
தேங்காய் மற்றும் கொப்பரை தேங்காய் ஆகியவை சேர்ந்து, ஐந்து லட்சத்து, 71 ஆயிரத்து, 109 ரூபாய்க்கு விற்பனையானது.