/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
7 பவுன் தாலி திருடிய வேலைக்கார பெண் கைது
/
7 பவுன் தாலி திருடிய வேலைக்கார பெண் கைது
ADDED : மே 06, 2024 02:27 AM
ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி, விவேகானந்தர் வீதி, எஸ்.பி.எம். அபார்ட்மெண்டை சேர்ந்த அந்தோணி சுதர்சன் மனைவி சுகுணா, 29; ஏழு பவுனில் தங்க தாலிக்கொடி அணிந்திருந்தார். அதில் கொக்கி விரிந்து இருந்ததால் கடந்த, 2ம் தேதி காலை கழற்றி வீட்டில் வைத்துள்ளார்.
இந்நிலையில் 4ம் தேதி இரவு தேடியபோது, தாலிக்கொடியை காணவில்லை. இதன் மதிப்பு இரண்டு லட்சம் ரூபாய். யாரோ திருடி சென்றிருக்கலாம் எனக்கருதி, சூரம்பட்டி போலீசில் புகாரளித்தார்.
போலீஸ் விசாரணையில் சுகுணா வீட்டில் வேலை செய்யும், சூரம்பட்டி வலசு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த சாமுண்டீஸ்வரி, 39, நகையை திருடியதை ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்து, 7 பவுன் தாலிக்கொடியை மீட்டனர்.