/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு
/
லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு
லோக் அதாலத் நீதிமன்றத்தில் 212 வழக்குகளுக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 02:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: தாராபுரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது. வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான சக்திவேல் தலைமை வகித்தார்.
ஓய்வு பெற்ற நீதிபதி நாகராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி மதிவதனி வணங்காமுடி, குற்றவியல் நடுவர் உமா மகேஸ்வரி முன்னிலை வகித்தனர்.இதில், 22 மோட்டார் வாகன வழக்கு, 39 உரிமையியல் வழக்கு உட்பட, 212 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதன் மொத்த மதிப்பு, 18 கோடியே, 82 லட்சத்து 472 ரூபாயாகும். 29 லட்சத்து, 61 ஆயிரம் ரூபாய் மதிப்பில், வங்கி கடன் சார்ந்த, 26 வழக்குகளுக்கும் தீர்வு கிடைத்தது.