/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கழிவு நீர் வெளியேற்றம் மக்கள் முற்றுகை
/
கழிவு நீர் வெளியேற்றம் மக்கள் முற்றுகை
ADDED : ஏப் 06, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெருந்துறை: பெருந்துறை அடுத்த, காஞ்சிக்கோவில் அருகில் பெரியவிளாமலையில், பழைய கெமிக்கல் கேன்களை விலைக்கு வாங்கி, அதை உடைத்து, பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிக்கும் பேக்டரி உள்ளது. கேன்களை சுத்தம் செய்யும்போது, நீருடன் கேன்களில் உள்ள கெமிக்கலும் வெளியேறுவதால், நீலத்தடி நீர் பாதிப்பதாக கூறி, குடோன் முன் கேன்கள் கழுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் நேற்று முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
காஞ்சிகோவில் போலீசார், பேக்டரி உரிமையாளர், மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குடோன் முன் கெமிக்கல் கேன்களை சுத்தம் செய்யவில்லை என்று, பேக்டரி உரிமையாளர் உறுதி அளிக்கவே, மக்கள் கலைந்து சென்றனர்.

