/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் குறித்து இதுவரை 90 புகார்களுக்கு தீர்வு
/
தேர்தல் குறித்து இதுவரை 90 புகார்களுக்கு தீர்வு
ADDED : ஏப் 09, 2024 01:53 AM
ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் லோக்சபா தேர்தலுக்காக, கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை செயல்படுகிறது.தேர்தல் தொடர்பான புகார்களை கடந்த, 7ம் தேதி காலை நிலவரப்படி, கட்டணமில்லா தொலைபேசி எண்ணுக்கு, 55 புகாரும், சி-விஜில் ஆப் மூலம், 34 புகாரும் வரப்பெற்றன.
நேற்று காலை, 7:00 மணி வரையிலான, 24 மணி நேரத்துக்குள் சி-விஜில் ஆப்பில் ஒரு புகார் மட்டும் பெறப்பட்டது. இப்புகாரை தொடர்புடைய தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினர், நிலை கண்காணிப்பு குழுவினர் போன்றோருக்கு தெரிவித்து நடவடிக்கை எடுத்து, எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் பதிவு செய்தனர்.நேற்று காலை, 7:00 மணி வரை டோல் பிரி எண்ணுக்கு, 55 புகார், சி-விஜில் எண்ணுக்கு, 35 புகார் என, 90 புகார்கள் வரப்பெற்று, 90 புகார் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர்.

