/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கடம்பூர், ஆசனுாரில் துணை மின் நிலையங்கள்
/
கடம்பூர், ஆசனுாரில் துணை மின் நிலையங்கள்
ADDED : ஜூலை 28, 2024 03:04 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன், கடம்பூர், கேர்மாளம், ஆசனுார், திங்களூர், குத்தியாலத்துார் மலைப்பகு-தியில் மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மக்க-ளுக்கு மின் வினியோகம், குடிநீர் வழங்கல் உட்பட பிற பணிகள் பாதித்தன.
இதுபற்றி மின்வாரிய உயர் அதிகாரிகள் கூறியதாவது:
ஆடி மாதத்தில் வீசி வரும் பலத்த காற்றால், வனப்பகுதி வழி-யாக செல்லும் மின் கம்பங்கள், மின் கம்பிகள் மீது மரக்கி-ளைகள் முறிந்து விழுந்து, மின் கம்பி துண்டிக்கப்பட்டது. இப்பி-ரச்னை அடிக்கடி நிகழ்கிறது. அவற்றை சீரமைக்க குறைந்தபட்ச நாட்கள் தேவைப்படுகிறது.
மலைப்பகுதி என்பதால், ஊழியர்கள் மின் கம்பங்கள், மின் கம்பி-களை கொண்ட ரோல்களை துாக்கி சென்று நிறுவி வருகின்றனர். தவிர வனப்பகுதியில் உள்ள கிராமங்களில் மின்னழுத்தம், மின் தடைக்கு நிரந்தர தீர்வாக கடம்பூர், ஆசனுார் ஆகிய இடங்களில் புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க நிர்வாக அனுமதி பெறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினர்.

