/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆடி மாத 3வது வெள்ளி வழிபாடு அம்மன் கோவில்களில் அமோகம்
/
ஆடி மாத 3வது வெள்ளி வழிபாடு அம்மன் கோவில்களில் அமோகம்
ஆடி மாத 3வது வெள்ளி வழிபாடு அம்மன் கோவில்களில் அமோகம்
ஆடி மாத 3வது வெள்ளி வழிபாடு அம்மன் கோவில்களில் அமோகம்
ADDED : ஆக 03, 2024 01:14 AM
ஈரோடு, ஆடி 3வது வெள்ளியையொட்டி, ஈரோடு மாநகர் மற்றும் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு அமோகமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி மாதத்தின் மூன்றாவது வெள்ளிக்கிழமையான நேற்று, ஈரோடு மாநகர் பெரிய மாரியம்மன் கோவிலில் அதிகாலை நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
இதேபோல் வீரப்பன்சத்திரம் காவிரி சாலை சின்ன மாரியம்மன், அசோகபுரம் மழை மாரியம்மன், முத்தம்பாளையம் அங்காளம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை செய்து, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது. கருங்கல்பாளையம் பெரிய மாரியம்மன் கோவில், ஈரோடு--சத்தி சாலை எல்லை மாரியம்மன், சூரம்பட்டி மாகாளியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
* கோபி அருகே பாரியூர் கொண்டத்துக்காளியம்மன், மொடச்சூர் தான்தோன்றியம்மன், கோபி சாரதா மாரியம்மன், அளுக்குளி செல்லாண்டியம்மன், கலிங்கியம் கரிய காளியம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
* புன்செய்புளியம்பட்டி மாரியம்மன், ஊத்துக்குளியம்மன், பிளேக் மாரியம்மன், காமாட்சியம்மன், ஆதிபராசக்தி அம்மன், சவுடேஸ்வரியம்மன் கோவில்களில் அபிஷேக, ஆராதனைகளுடன் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் நடந்தது.