/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வயநாடு சம்பவத்துக்கு நிதி வழங்கிய சிறுவன்
/
வயநாடு சம்பவத்துக்கு நிதி வழங்கிய சிறுவன்
ADDED : ஆக 13, 2024 05:53 AM
ஈரோடு: ஈரோடு மாவட்டம் தாண்டாம்பாளையத்தை சேர்ந்த லித்துரன் நிவேதிதா, 10; கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், 'வயநாடு பேரிடர் நிவாரண நிதியாக', 10,200 ரூபாய்க்கான டிமாண்ட் டிராப்ட்டை நேற்று வழங்கினார்.
சிறுவனை அழைத்து வந்த தாத்தா மணிவண்ணன் கூறியதாவது: எனது மகளின் மகனான லித்துரன், தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். அவனது சேமிப்பு பணமான, 10,200 ரூபாயை, வயநாடு சம்பவத்துக்கு நிதியாக, 'கேரளா மாநில முதல்வரின் பேரிடர் நிவாரண நிதிக்கு அளிக்க முன்வந்தான். வயநாடு சம்பவத்தை பார்த்தது முதல், பேரன் அழுத்தமான நிலையில் காணப்பட்டதுடன், அவர்களுக்கு சிறு தொகையாவது வழங்க உறுதி கொண்டு இதை கொடுத்துள்ளான். இவ்வாறு அவர் கூறினார்.

