ADDED : ஆக 07, 2024 01:32 AM
புன்செய் புளியம்பட்டி,
புன்செய்புளியம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளராக பணிபுரிபவர் ஐஸ்வர்யா. கடந்த, 2ல் புன்செய் புளியம்பட்டி போலீசில் ஒரு புகார் மனு அளித்தார்.
அதில், 'புளியம்பட்டியை சேர்ந்த கரிவரதராஜன், விண்ணப்பள்ளி அருகேயுள்ள சாணார்பதியை சேர்ந்த சந்தோஷ்குமார் ஆகியோர், சம்பந்தமில்லாத ஆவணத்தை கொண்டு வந்து, ரத்து செய்யுமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கொலை மிரட்டல் விடுத்தனர். பதிவு பணிக்கு குந்தகம் விளைவித்தனர். சட்ட முத்திரை என்ற பத்திரிகை மூலம், சமூக வலைதளங்களில் ஆதாரமின்றி பொய் செய்தி பரப்பி வரும் சந்தோஷ்குமார், கரிவரதராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்திருந்தார். இதன்படி வழக்குப்பதிந்து விசாரித்த போலீசார், சந்தோஷ்குமார் நேற்று கைது செய்தனர். சத்தி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தி கிளை சிறையில் அடைத்தனர். தலைமறைவான கரிவரதராஜனை தேடி வருகின்றனர்.